Old Tamil Poetry

Translations of Tamil Poetic works that span 2000 years

Nammazhvar – Thiruvaimozhi 6.8.1

You’ll rule this Golden earth, You’ll rule this whole world,
Oh’ gracious birds! If you’ll inform of my pitiable state
to dark hued Kannan – creator of the universe, possessor of my heart -,
this wretched soul pleads with you?

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?,
நன்னலப் புள்ளினங்காள். வினையாட்டியேன்நானிரந்தேன்,
முன்னுல கங்களெல்லாம் படைத்தமுகில்வண்ணன்கண்ணன்,
என்னலங் கொண்டபிரான் தனக்கென் நிலைமையுரைத்தே?

In this verse, Nammazhvar assumes the role of a girl in love with Kannan. She misses him desperately and pleads with the birds to go and inform him of her pitiable state. Since the birds roam all over the world, she promises them that they can rule the whole world if they do as she asks. She asks them to inform Kannan, the creator of all the worlds, the Lord who has possessed her heart, that she is missing him and to take her with him soon. If the birds do this task, they can rule the whole world.

பொன்னுலகு – பொன் + உலகு – Golden earth
புவனிமுழுதும் – புவனம் + முழுதும் – whole world
ஆளீரோ – ஆள மாட்டீரோ – May you rule
நன்னலம் – good mannered – gracious
புள்ளினங்காள் – புள் + இனம் + காள் – Oh’ flocks of birds
வினையாட்டியேன் – வினை செய்தவள் – sinner / wretched soul
நானிரந்தேன் – நான் + இரந்தேன் – I beg
முன்னுலகங்களெல்லாம் – முன் + உலகங்கள் + எல்லாம் – at first (created) all worlds / universe
படைத்த – created
முகில் வண்ணன் – dark (cloud) hued
என்னலம் – என் + நலம் – my heart
கொண்ட – seized / captured / possessed
பிரான் – Lord
நிலைமையுரைத்தே – நிலைமை + உரைத்தே – If (you) inform (my) condition

Single Post Navigation

8 thoughts on “Nammazhvar – Thiruvaimozhi 6.8.1

  1. சு. ‌‌‍‌‌‌‌‌‌‌‌‍ஸ்ரீராம் on said:

    நேற்று‌ 2.0 திரைப்படத்தில் இப்பாசுரம் பற்றிக் கேட்ட‌ பிறகு, இதற்கான முழு பொருளையும்‌ இணையத்தில் தேடும் போது தங்களின் இந்தப் பதிவைப் படிக்க நேர்ந்தது. பாசுரத்தின் பொருள் விளக்கும் தங்களின் இந்தப் பதிவிற்கு என் உளமார்ந்த நன்றி. தங்களின் உன்னதமான பணி தொடரட்டும்.

    Like

  2. DCP Adhi to Badri: உலகப்புகழ் நமக்கு எப்படில்லாம் கிடைக்குது பாத்தியா? 🙂 #சிபாவபகூ

    Like

  3. Siva.Muthukkumarasamy on said:

    வணக்கம் பல. மிக நேரிய மொழிபெயர்ப்பு . வணங்கியும் வாழ்த்தியும் நனி மகிழ்கின்றேன். மொழிபெயர்ப்பாளர் ஒருவரா? பலரா? அறிந்து கொள்ள விழைகின்றேன். பாராட்டுகள் பற்பல .-
    – -அறமுடன்..
    சிவ.முத்துக்குமாரசாமி.

    Like

    • நன்றி. இந்தத் தளத்தில் இருக்கும் அனைத்து மொழிபெயர்ப்புகளும் நான் ஒருவனே (செந்தில்நாதன்) செய்பவை 🙂

      Like

      • Siva.Muthukkumarasamy on said:

        வணக்கம் மிக . தங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைவன். தங்கள் தெளிவு சால் அறிவைக் கண்டு மிக மிக மகிழ்கின்றேன். என் பெயர் சிவ.முத்துக்குமாரசாமி. சொந்த ஊர்: கொப்பம்பட்டி, துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம். குடியிருக்கும் இடம்: ஆத்தூர், சேலம் மாவட்டம். தற்போது தேனி மாவட்டத்தில் தமிழக அரசு – கூட்டுறவுத்துறையில் இணைப்பதிவாளராகப் பணிபுரிகிறேன். தங்கள் மொழிபெயர்ப்பு மிகத் தெளிவாகவும், ஆக்கியோன் உள்ளம் காட்டுவதாகவும் நன்கு அமைந்துள்ளது. தங்கள் கல்வி குறித்தும் தங்கள் ஆசிரியர்கள் குறித்தும, படைத்த படைப்புகள் குறித்தும் அறிய விரும்புகிறேன். என் அகவை: 47. தங்கள் திருவடி வணங்கும் நல்வாய்ப்பும் எனக்கு அமைய இறைமையை இறைஞ்சுவன்.
        இறவா இன்ப அன்பு வேண்டி,
        அறமுடன்
        – சிவ.முத்துக்குமாரசாமி .

        Like

  4. Ramkumar Rengarajan on said:

    அப்படத்தில் 2.0 “நன்னல புள்ளினங்கள்” என்பதற்கு பதிலாக “நன்னய புள்ளினங்கள்” என்று சொல்லப்படும். ஜெயகாந்தன்னின் பிழை !

    Like

Leave a comment